திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 5ம் நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் திருவாரூரில் சுகாதார பணிகளை தொய்வு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம்
திருவாரூர் நகராட்சியில் வேலை பார்க்கும் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 5ம் நாள் வேலை நிறுத்த போராட்டத்தை ஈடுபட்டுள்ளனர்.
இவர்களது முக்கிய கோரிக்கையாக அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வார விடுப்பு மற்றும் பண்டிகை விடுப்புகளை வழங்க வேண்டும், மாதந்தோறும் சம்பள பில் வழங்க வேண்டும், பி.எப் கணக்கு முறையில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட தங்களது நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 5ம் நாள் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள், ஓட்டுநர் உள்ளிட தொழிலாளர்களை வஞ்சிக்க கூடாது, தூய்மை பணியாளர்களை நவீன கொத்தடிமைகள் போல் நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பி திருவாரூர் நகராட்சிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், திருவாரூர் நகராட்சியில் சுகாதாரப் பணிகளில் தடை ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் நகராட்சி ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் சோமாஸ்கந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.















