சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் பெண் வழக்கறிஞரை அவமதித்ததாக காவல் உதவி ஆய்வாளர்களை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன முழக்கம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் காவல்துறையை கண்டித்து பணிகளை புறக்கணித்து கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
காவல் நிலையம் சென்ற பெண் வழக்கறிஞர் கமலி என்பவரை அவமரியாதையாக பேசி அவமதித்ததாக காவல் உதவி ஆய்வாளர் காயத்திரி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கலியபெருமாள் ஆகிய இருவரையும் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மேலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது வழக்கறிஞர்கள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்















