காவிரியில் திறக்கப்பட்ட நீர், கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு சரிவர வந்து சேராத நிலையில், வடகிழக்கு பருவமழையை நம்பி நேரடி விதைப்பு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரம் :-
இந்த ஆண்டு மேட்டூரில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவில்லை. தொடர்ந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் உரிய காலத்தில் திறக்கப்படாத நிலையில், கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது 45 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், காவிரி கடலுடன் கலக்கும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மிகவும் தாமதமாக தண்ணீர் வந்து சேர்ந்தது. இருப்பினும் பருவமழை பொய்த்தது உள்ளிட்ட காரணங்களால் ஆறுகள் வறண்ட நிலையில், காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் சரிவர வந்து சேராமல், விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு கிழக்கு நிர்ணயித்திருந்த நிலையில் 20% மட்டுமே, நடவு பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆறுகளில் தண்ணீர் இல்லாத நிலையில் நிலத்தடி நீரும் கைவிட்டதால், விவசாயிகள் நேரடி விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே சம்பா சாகுபடி விளைச்சல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வழக்கமான பரப்பை விட இந்த ஆண்டு, நேரடி விதைப்பில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். நமக்கு உரிய தண்ணீரை கேட்டு பெற தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பைட்: –
1.மதிவாணன் விவசாயி
2.தேவேந்திரன் விவசாயி















