வேலூரில் மாற்றுத்திறனாளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது இதில் மாற்றுத்திறனாளர் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர் -மத்திய அரசின் அலிம்கோ திட்டத்திற்கு பயனாளர்கள் தேர்வு
வேலூர்மாவட்டம்,வேலூரில் நகர அரங்கில் மாற்றுத்திறனாளர்களுக்கான சிறப்பு முகாமானது நடைபெற்றது மத்திய அரசின் அலிம்கோ திட்டத்திற்காக சக்கர நாற்காலி மோட்டார் பொருத்திய வாகனங்கள் ,பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் கண் கண்ணாடிகள் ,சக்கர நாற்காலிகள் ,பார்வை திறன் குறைபாடு உடையவர்கள்ஊன்றுகோல்கள் செவி திறன் கருவி செயற்கை கை கால்கள் போன்றவை வழங்குவதற்காக மாற்றுத்திறனாளர்களை தேர்வு செய்ய சிறப்பு முகாமானது நடத்தப்பட்டது இதில் மாற்றுத்திறனாளர் துறை அலுவலர் பாபு தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் திரளான வேலூர் குடியாத்தம்,பேர்ணாம்பட்டு கேவிக்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த திரளானோர் இம்முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்















