ஜப்பானில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தடகள வீரர் ராஜேஷ் அவர்களை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மாலை அணிவித்து பாராட்டு.
ஜப்பானில் நடைபெற்ற 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4X400 தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வெண்கல பதக்கம் வென்ற திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியைச் சேர்ந்த தடகள வீரர் ராஜேஷை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் அழைத்து மாலை அணிவித்து பாராட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ராஜேஷ் தெரிவித்ததாவது….ஜப்பான் ஆசிய விளையாட்டில் விளையாடி வெற்றி பெற்றதற்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்கள் தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், ரயில்வே துறை உள்ளிட்ட அனைவரும் எனக்கு ஆதரவு தந்தார்கள் .அது மிகவும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் திருவாரூர் மாவட்டத்திற்கு என ஒரு தடகள விளையாட்டு மைதானம் வேண்டும் என கேட்டு இருக்கிறேன் என ராஜேஷ் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர்
குமரன் ,, திருவாரூர் மாவட்ட தடகள சங்கம் செயலாளர் டாக்டர் டி. சிவரஞ்சனி
உடனிருந்தார்.
பேட்டி : ராஜேஷ் விளையாட்டு வீரர் .















