தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் தேர் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சுமார் 172 ஆண்டுகள் ஆன புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றது ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது கூட்டு பாடல் திருப்பலி வேளாங்கண்ணி பேராலய அதிபர் பேரருட் திரு இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது .ஏராளமானவர்கள் திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர் மேலும் ஆலயத்தில் இருந்து திருத்தேர் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடைபெற்றது திருத்தேரில் ஜெபமாலை மாதா காட்சியளிக்க மெழுகுவர்த்தி ஏந்தி ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர் இதிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்















