திருவாரூரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி மற்றும் கஞ்சாவை பயன்படுத்தி வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர் – அவர்களிடமிருந்து சுமார் 3.300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மூவரையும் சிறையில் அடைத்தனர்..
திருவாரூர் மாவட்டம் குடவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் காவல் ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராதாநல்லூர் குடமுருட்டி ஆற்றங்கரை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்ததையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தவறுகளை தகவல்களை தெரிவித்ததுயடுத்து காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது மூவரும் சட்ட விரோதமாக கஞ்சா பயன்படுத்திருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் குடவாசல் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பரணி என்கிற பரணிதரன் கஞ்சாவை விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் பரணி விற்பனை செய்த கஞ்சாவை மற்றொரு சரித்திர பதிவேடு குற்றவாளியான மயிலாடுதுறையை சேர்ந்த இமானுவேல் மற்றும் அவரது நண்பர் சுரேந்தர் ஆகியோர் வாங்கி பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.
உடனடியாக மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து சுமார் 3.300 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நான்கு மொபைல் ஃபோன்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

















