வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் குடும்பத்தினர் ஊர் பொதுமக்களுடன் வந்து மனு அளித்த நிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கதறி அழுத நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியது:-
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற மீனவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் குடும்பத்தினர் மீனவ மக்களுடன் வந்து மனு. ஆட்சியர் அலுவலக வாயிலில் கதறல்:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் வீரன் (32). மீனவர் ஆன இவர் சவூதி அரேபியாவில் வேலைக்காக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார். வீரனுக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வீரன் மாரடைப்பால் உயிரிழந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீரனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீரனின் குடும்பத்தினருடன் மீனவ கிராம மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்து மனு அளித்து துரித நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் கோரிக்கை விடுத்தனர். வீரனின் மனைவி வாய் பேச முடியாத ஊனமுற்ற பெண் இரண்டு குழந்தைகள் உள்ளதால் அவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மனு அளித்த குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது….















