முதல்வர் தொகுதியில் மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி அதிகாரிகள் மீது பகிரங்க குற்றச்சாட்டு
ஆளும் அரசின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு
மக்கள் பணிகளைக் கிடப்பில் போட்டு அலட்சியபடுத்தி வருவதாக பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை மாநகராட்சியின் மேயர் முதல் அதிகாரிகள் வரை ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படுகின்றனர்
தமிழகத்தில் கடந்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றி கழகம் புதிதாக ஆட்சி அமைத்தது அன்று முதல் இன்று வரை சென்னை மாநகராட்சியின் பெயர் மற்றும் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் ஆளுங்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக சென்னை மாநகராட்சி 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜீவன் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நலத்திட்ட பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் கட்டிடங்களை திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் சாலை குடிநீர் வசதிகளை செய்து தராமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் பகிரங்க குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார் குறிப்பாக தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல மையம் ரேஷன் கடை போன்ற கட்டிடங்கள் திறக்கப்படாமல் மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருவதாகவும் இதற்கு மாநகராட்சி அதிகாரிகளை காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை நேரடியாக சென்று பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்து பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார் 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜீவன்
சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் இந்தப் போக்கே நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு முன்பாக ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும் ஆளும் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் குறிப்பாக இன்னும் மூன்று நான்கு மாதங்களில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் அதிகாரிகள் தங்கள் கைகளுக்கு அதிகாரங்களை கொண்டு வர வேண்டும் என எண்ணுவதாகவும் பணம் கொடுத்தால் மட்டுமே பணிகள் நடைபெறும் பணம் கையில் வராததால் பணிகள் நடைபெறவில்லை என்றும் ஆளும் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் லஞ்சம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் லஞ்சப் பணம் கிடைக்காததால் பணிகளைக் கிடப்பில் போட்டு அலட்சியம் காட்டி வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் மீது சென்னை மாநகராட்சி 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜீவன் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்

















