தமிழக அரசு கள்ளு கடைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு பதிலாக, ஆந்திராவில் உள்ளது போல், பனைத் தொழிலாளிகள் நேரடியாக கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும், மயிலாடுதுறையில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்க விழாவில் பங்கேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் பேட்டி :-
தமிழகத்தில் நாடார் மகாஜன சங்கத்தை தோற்றுவித்த பொறையார் த.ரத்தினசாமி நாடார் இன் 161 வது பிறந்த தின விழா இன்று கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில், நாடார் மகாஜன சங்கம் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் நாடார் உறவின்முறை சங்கத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிர்வாகிகள், ரத்தினசாமி நாடார் உள்ளிட்ட தலைவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அன்னாரது நினைவை போற்றும் விதமாக அமைதிப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரத்தினசாமி நாடார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, இடைத்தேர்தலில் மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு தங்கள் சமுதாய மக்கள் வாக்களிப்பார்கள் என்றும், கள்ளுக்கடைகளைதிறப்பதற்கு பதில் ஆந்திரஅரசு பனைத் தொழிலாளிகள் நேரடியாக விற்பனை செய்துள்ள திட்டத்தை செயல்படுத்துவதுபோல் தமிழ்நாட்டிலும் பனைத் தொழிலாளர்கள் நேரடியாக கள் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பைட் :-
G.கரிக்கோல் ராஜ் – நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர்















