திருவாரூரில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான கேரம் பேஸ் தொடர் போட்டியில் 25க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடி வருகின்றனர்*
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி பகுதியில் மாவட்ட அளவிலான கேரம் பேஸ் தொடர் போட்டி இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிங்ஸ் கிளப் மற்றும் அஹமதியா நண்பர்கள் இணைந்து நடத்தும் இந்த மாவட்ட அளவிலான கேரம் பேஸ் போட்டியை தொழிலதிபர் ஜாகிர் உசேன் பாபு தொடக்கி வைத்தார்.
இப்போட்டியில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான கேரம் போர்டு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மொத்தம் 25க்கும் மேற்பட்ட அணிகள் இந்த கேரம் பேஸ் தொடர் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. நாளொன்றுக்கு 12 சுற்றுகள் வீதம் மொத்தம் 2 நாட்களில் 24 சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.
நாளை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 5000 ரூபாயும், இரண்டாம் பரிசாக மூன்றாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 2000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விளையாட்டு போட்டியை ஒருங்கிணைத்து நடத்தும் பணியில் கலிபா, ஹாஜி, அப்துல் கரீம், கொத்துபுதீன், துரை உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர்.















