தமிழகத்தில் முதல்வருக்கு மரியாதை இருக்கிறது அதேபோல் அவருக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது அதே போன்று எதிர்பார்ப்பும் இருக்கிறது
முதல்வரின் நல்ல பேரினால் கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது கார்த்திக் பா சிதம்பரம் பேட்டி
27.09.2026 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் 81 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த ரத்ததான முகாமில் சிறப்பு அழைப்பாளராக கார்த்திக் சிதம்பரம் கலந்துகொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
சென்னை, மூலக்கடை , மேம்பாலம் ஜங்ஷன் அருகே,
தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவ அணி மாநில பொதுச் செயலாளர் டாக்டர்.ஷியாம் சாகர் மற்றும் வடசென்னை சௌந்தரராஜன் ஏற்பாட்டில்,
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் 81 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கலந்து கொண்டு ரத்ததானம் முகாமை துவங்கி வைத்தார். இதில் ஆர்வத்துடன் இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். ரத்த தானம் செய்த அனைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சான்றிதழ் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் பா சிதம்பரம் தமிழகத்தில் முதல்வருக்கு நல்ல பெயர் இருக்கிறது அவருக்கு பல வரவேற்பும் இருக்கிறது அதேபோல் நல்ல எதிர்பார்ப்பும் இருக்கிறது வேட்பாளர்களை விட முதல்வரின் நல்ல பெயருக்கு கூட்டணி கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று கூறினார்
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்.















