விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கிளி, பன்றி கதை சொல்லி அரசு அலுவலர்களை பன்றி குனம் என்று விமர்சித்த விவசாயிக்கு அரசு அலுவலர்கள் கடும் எதிர்ப்பு; விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட அலுவலர்கள்; விவசாயின் பேச்சை கண்டித்த மாவட்ட ஆட்சியர்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரவின்குமார் தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் நாகை, கீழ்வேளூர், திருமருகல், கீழையூர் ஒன்றித்திற்கு உட்பட்ட விவசாயிகள் பங்கேற்று தங்கள் பகுதி குறைகளை தெரிவித்து பேசினர். அப்போது கீழ்வேளூர் பட்டமங்கலத்தை சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவர் பேசும் போது கிளி, பன்றி கதையை குறிப்பிட்டு பேசனார். ஒருவர் கிளி வளர்தார். மற்றொருவர் பன்றி வளர்த்தார். கிளி வளர்ப்பவர் சொல்வதையெல்லாம் கேட்டு கிளி பேசும் அது போல பன்றி செய்வதில்லை என்ற அவர் கிளி குணம் வேறு, பன்றி குணம் வேறு அது போல சில அலுவலர்கள் பன்றி குணம் உள்ளவர்களாக இருப்பதாக பேசினார். இதற்கு அரசு அலுவலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயின் பேச்சுக்கு கண்டனத்தை தெரிவித்தனர். இதனால் அரசு அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய ஆட்சியர் பிரவின்குமார் இது போல் அரசு அலுவலர்களை பன்றியோடு ஒப்பிட்டு பேசுவது தவறு என்றும் அதைப் போல் இனி அவையில் பேச கூடாது என்று விவசாயை கண்டித்தார். மேலும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட அரசு அலுவர்களையும் சமாதனப்படுத்தினார். விவசாயிகள் குறைத்தீர்ப்பு நாள் கூட்டத்தில் அரசு அலுவலர்களை பன்றியோடு ஒப்பிட்டு பேசியதால் அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் கூட்டத்தில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.













