இயந்திரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட இளைஞரின் கை *
துண்டித்த கையை இணைத்த மருத்துவர்கள்..
இளைஞருக்கு மறுவாழ்வு கொடுத்து மருத்துவத்துறையில் சாதனை..
ஏழு முறை அறுவை சிகிச்சை மூலம் சாதனை படைத்த மருத்துவர்கள்..
சென்னை புளியந்தோப்பில் அமைந்துள்ள பிரைட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் வேலை செய்யும்போது மிஷினில் கைமாட்டிக்கொண்டு தானாஜசயராஜ் என்ற இளைஞரின் கை துண்டாக உடைந்ததில்
அறுவை சிகிச்சை நிபுனர்கள் குழு முற்றிலும் தூண்டிக்கப்பட்ட வலது முன் கையை வெற்றிகரமாக ஏழு முறை அறுவை சிகிச்சை மூலம் இளைஞருக்கு மீண்டும் கையை திருப்பிக் கொடுத்து மருத்துவ துறையில் சாதனை படைத்துள்ளனர்,
இந்த விபத்தினால் அவரது எலும்புகள் தமனிகள் ரத்த நாளங்கள் தசைகள் நரம்புகள் மற்றும் திசுக்கள் அனைத்தும் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருந்தது
தீவிரத் வலியினால் அவரது உயிரை காப்பாற்ற உடனடியாகவும் பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை ரத்தநாளா அறுவை சிகிச்சை எழும்பியல் மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை ஆகிய பிரிவுகளை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழுவை விரைந்து அணி திரட்டி சிகிச்சை நடத்தினர்,
டாக்டர் எஸ் சொக்கலிங்கம் நிர்வாக இயக்குனர் பிரைட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர் ராஜ்குமார் வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் டாக்டர் கார்த்திக் சண்முகம் எழும்பியல் நிபுணர் மற்றும் ஆகியார் கொண்ட அவசர மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் குழு இணைந்து சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்,
சுமார் ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் ஒன்பது மணி நேரம் நீடித்த முதலாவது அவசர மறுப்பொருத்தர் அறுவை சிகிச்சையின் போது எலும்பியல் குழுவினர் (k Wire முறையை பயன்படுத்தி ரேடியாஸ் மற்றும் (radius&ulna)எலும்புகளை உறுதியாக சீரமைத்தனர்
அதே வேளையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கையில் இயல்பு இயக்கத்திற்கு அவசியமான பல (flexor and extensor tendons)இந்த சேனல்களை மிகத் துல்லியமாக மறு சீரமைத்தனர்
இந்த மறுசீரமைப்பு சிகிச்சை தொடர்ந்து ரேடியல் மற்றும் அல்னர் ஆக அறுவை சிகிச்சை மூலம் இணைக்கப்பட்ட கையனது ரத்த துடிப்பு மீண்டும் தொடங்கியது மேலும் உள்ளங்கையின் ரத்த நாள வளைவுகள் (palmar arches) வரை ரத்த ஓட்டம் தடையின்றி பாய்வது (doppler)பரிசோதனை மூலமாக உறுதி செய்யப்பட்டது
பாதிக்கப்பட்ட கை மெதுவாக வெப்பத்தையும் நிறத்தையும் ரத்த ஓட்டத்தையும் மீண்டும் பெற்றது,
டாக்டர் எஸ் சொக்கலிங்கம் நிர்வாக இயக்குனர் பிரைட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கூறுகையில் பல்வேறு மருத்துவ துறைகளில் ஒருங்கிணைந்த கூட்டுப் முயற்சிக்கு(multidisciplinary collaboration )சிறந்த சான்றாக இந்த சிகிச்சை அமைந்திருக்கிறது இத்தகையை மிக்க கடுமையான காயத்துடன் ஒரு நோயாளி வரும்போது ஒவ்வொரு நொடியும் மிகவும் விலை உயர்ந்ததாகும் எங்கள் மருத்துவ குழுவினர் உடனடி முழு வீச்சுடன் களமிறங்கி செயல்பட்டது
இந்த நோயாளியின் கையை இழக்கும் அபாயத்திலிருந்து தடுத்து அதை வெற்றிகரமாக மீட்டெடுக்க முக்கிய காரணமாக அமைந்தது
கொடூரமான விபத்துகளால் உடல் உறுப்புகள் துண்டிக்கப்படும் சூழலில் சிறப்புமிக்க பல்துறை மருத்துவக் குழுவின் (multidisciplinary care )அவசர சிகிச்சை உடனடியாக கிடைப்பதன் அவசியத்தை இந்த சிகிச்சை நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது,
விபத்தில் கை துண்டாக போனதில் அதை இணைத்து மருத்துவத்துறையில் சாதனை படைத்த மருத்துவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளும் நன்றியிலும் தெரிவித்துள்ளனர்,













