தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் மாதவன் பேசினார் தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரம் சார்பில் 37 வது வார்டு சமரச வீதியில் மாபெரும் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 37 வது வார்டு வட்டச் செயலாளர் லதா ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் மாதவன் கலந்து கொண்டு பேசுகையில்
விரைவில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நம்ம கூட்டணி கட்சியில் உள்ள 52 கவுன்சிலர்கள் இருப்பார்கள் அங்கேயும் மேயரா நாம்தான் இருப்போம். அங்க என்னென்ன பிரச்சனைகள் உங்களுக்கு தெரியுதோ, அதை நீங்களே வந்து முடிக்கலாம். உங்களில் ஒருவரை தான் நீங்கள் தேர்வு செய்வீர்கள் மக்களுக்காக உழைக்கணும்.
தலைவர் சொன்னது போலத்தான். நம் கழகப் பொதுச் செயலாளர் ஆனந்த் அண்ணன் போன மீட்டிங்ல சொன்னார் “நாங்களே, அமைச்சரே தப்பு பண்ணாலும் எங்க தலைவர் வந்து அப்படியே தூக்கி வெளியே போட்டுருவாரு”ன்னாங்க. அதே போலத்தான். நீங்கள்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாலும் கூட, நீங்க தப்பு பண்ணதா இருந்தா கண்டிப்பா உங்களையும் அகற்றுவதற்கு தலைவர் தயங்க மாட்டார் நாம் தப்பு பண்ண வரல, தப்பை தட்டி கேட்கத்தான் வந்திருக்கோம்.
தளபதி முகத்தைக் கொண்டு காமிங்க, இன்னைக்கு நாங்க வெற்றி அடைஞ்சிருப்போம்.
அதுமட்டும் இல்ல, ஃபர்ஸ்ட் எலக்சன்ல எப்படி வருவாங்கன்னு கேட்டாங்க, தளபதி வந்து ஆட்சி அமைச்சிட்டாரு. இதுவரைக்கும் வரலாற்று சாதனையா பார்த்தீங்கன்னா, 234 தொகுதியிலையும் நின்ற வேட்பாளர்கள் வந்து டெபாசிட் வாங்கி இருக்குற ஒரே கட்சியா இருந்தா நம்ம தமிழக வெற்றிக் கழகம் மட்டுமாத்தான் இருக்கும். இத்தனைக்கும் யாரு வேட்பாளர்கள்ன்னே தெரியாமலேயே தளபதியை நம்பித்தான் எல்லாரும் ஓட்டு போட்டுருக்காங்க. இன்னைக்கு அந்த தளபதியும் அதை காப்பாற்றி கொண்டு போயிட்டு இருக்காங்க. எதிர்கட்சியோ எதுவோ நம்ம பார்க்கல. நீங்க சட்டசபைல லைவ்ல எல்லாரும் பார்த்திருப்பீங்க. தலைவர் வந்து நம்ம கட்சியினுடைய எம்.எல்.ஏ.க்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளை விட எதிர்க்கட்சிகள் வைக்கக்கூடிய கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்து கொடுத்திருக்காரு, அது உங்களுக்கே தெரியும். நிறைய விஷயங்கள் நடந்திருக்கு, இனியும் நடத்துவாரு.
இன்னைக்கு தாராபுரம் தொகுதி, மதுராந்தகம் தொகுதியெல்லாம் பாருங்க. அமோக வாக்கு வித்தியாசத்துல நம்ம ஜெயிக்கிறோம். தளபதி வந்து ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்காருன்னு சொன்னாங்க. ஸ்கிரிப்ட் ரெடி பண்ணல, ஆல்ரெடி நீங்க செய்த குற்றங்களுக்குத்தான் ரெடி பண்ணிட்டு இருக்காரு. நாளைக்கு வந்து மதுராந்தகத்துல வந்து எப்போ தெறிக்க விடுறாருன்னு மட்டும் பாருங்க 30-ஆம் தேதி, தாராபுரத்துல எப்படி தெறிக்க விடுறாருன்னு பாருங்க. அப்போ உங்களுக்குத் தெரியும்.
இன்னியும் இல்லை, 234 தொகுதியில நீங்க எப்ப எலக்சன் வச்சாக்கூட ஒரு வரலாற்று சாதனை படைக்கக்கூடிய ஒரே தலைவர் நம்ம தளபதி மட்டும்தான். 234-லையும் வெல்லக்கூடிய ஒரே திறமையானவரும் நம்ம தளபதிதான். இன்னைக்கு சட்டசபை லைவ் வந்து எல்லாருமே பார்த்திருப்பீங்க. நீங்க எல்லாருக்குமே வந்து அந்த சட்டசபைல என்ன நடக்குதுங்கறதை ஒளிவு மறைவு இன்றி காமிச்ச ஒரே கட்சி நம்ம தமிழக வெற்றிக் கழகம்தான்.
இங்கே நம்ம உள்ளாட்சித் தேர்தல்ல வரும்போது தயவு செய்து எல்லாரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் யாருக்கும் எந்த ஈகோவும் இருக்கக்கூடாது. நம்மிட்ட பணம் இல்லை, நம்மள நிக்க விடுவாங்களான்னு கேட்டா அது கிடையாது. நமது கட்சியில் பணம் பேசாது உங்க உழைப்பு மட்டும்தான் பேசும். நீங்க உழைச்சீங்கன்னா அதற்கு தக்க கூலி உங்களுக்கு கிடைக்கும். நான் இன்று மாவட்டச் செயலாளரா இருக்கிறேன் என்றால் உங்களுக்கே தெரியும் ஒரு ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர் எப்படி இருப்பாங்கன்னு எல்லாம் தெரியும். ஆனா தளபதி ஒரு சாமானியனை ஒரு மாவட்டச் செயலாளர் ஆக்கினாருன்னா நீங்க என்னையே எக்ஸாம்பிளா எடுத்துக்கலாம். நான் இன்னைக்கு வந்தும் நான் யாரையுமே மதிக்காம இல்லை. எல்லாரையும் மதிச்சு அரவணைத்து தான் கொண்டு செல்கிறேன் அதேபோல நீங்களும் எல்லாரையும், அரவணைத்து செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் நமக்குள் ஒரு சின்ன பிரச்சனை வரணும்னுதான் எல்லாரும் காத்து கொண்டு இருப்பார்கள் அது நமக்கு உள்ளாட்சியில வந்து பிரதிபலிச்சிடக் கூடாது. அதனால எல்லாரும் …














