மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் 110-வது பிறந்தநாள் விழா , மலரஞ்சலி செலுத்தி இனிப்புகள் வழங்கி பாஜகவினர் உற்சாகக் கொண்டாட்டம் :-
பாரதிய ஜனசங்கத்தின் முன்னோடியும், ‘முழுமையான மனிதநேயம்’ (Integral Humanism) மற்றும் ‘அந்த்யோதயா’ எனும் தத்துவங்களை இந்திய அரசியல் களத்திற்கு வழங்கிய மேதை, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் 110-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று பாஜகவினரால் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை காமராஜர் சாலையில் இன்று அவரது பிறந்தநாள் விழா சிறப்புடன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் மோடி கண்ணன் தலைமை வகித்தார்.
காமராஜர் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் திருவுருவப் படத்திற்கு, மோடி கண்ணன் தலைமையில் திரண்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி வீரவணக்கமும் புகழஞ்சலியும் செலுத்தினர்.
தொடர்ந்து, தீன்தயாள் உபாத்யாயாவின் பொதுவாழ்வு சேவைகளையும், ஏழை எளிய மக்களுக்கான அவரது சிந்தனைகளையும் நினைவுகூர்ந்த நிர்வாகிகள், “பாரத் மாதா கி ஜே”, “வந்தே மாதரம்” உள்ளிட்ட தேசபக்தி கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்வின் நிறைவாக, விழாவில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அனைவருக்கும் உற்சாகமாக இனிப்புகள் வழங்கி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர ஒன்றிய பாஜக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்













