திருப்பத்தூரில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை கவுன்சில் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சிவராஜ் லாட்ஜ் அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை கவுன்சில் சார்பாக மாவட்ட கவுன்சில் செயலாளர் மற்றும் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் தேவராஜ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரவை துணைத் தலைவர் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் செங்குட்டுவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மேலும் தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும் மின்சார சட்டச திருத்தத்தை கைவிட வேண்டும் விதை திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு எதிராகவும் போராடும் தூய்மை பணியாளர்களை அழைத்துப் பேச வேண்டும் தூத்துக்குடி அனல் மின் நிலையம் விரிவாக்கத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது ஸ்மார்ட் மீட்டர் என்ற பெயரால் தனியாருக்கு தாரைவாக்க கூடாது சேலம் குடிநீர் திட்டத்தை தனியாரிடமிருந்து திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநில அரசுக்கு எதிராகவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த மாபெரும் கட்டண ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை கவுன்சில் சார்பாக சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்













