முழுமையாக சாலை போடாமல் பல லட்ச ரூபாய் மோசடி, போடாத சாலைக்கு பில் போட்டதாக, திமுக நகர மன்ற தலைவர் மீது திமுக கவுன்சிலர் புகார், நகர மன்ற தலைவர் திமுக கவுன்சிலர் இடையே கடும் வாக்குவாதம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது, செய்தியாளர்களை யார் உள்ளே விட்டது வெளியேற சொல்லுங்கள் என்று செய்தியாளர்களை மிரட்டிய நகர மன்ற தலைவர், மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டம், நகர்மன்ற தலைவர் திமுகவைச் சேர்ந்த குண்டாமணி என்கிற செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி சாலைக்கு குடிநீர் பாதாள சாக்கடை பிரச்சனைகள் குறித்து பேசினர். ஆறாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரிஷி குமார் என்பவர், தங்கள் பகுதியில் நகர் மன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சாலையை முழுமையாக போடாமல், பாதி அளவு மட்டுமே போடப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் புகார் தெரிவித்தும், ஒப்பந்ததாரருக்கு முழு சாலையை போட்டதாக தெரிவித்து அதிகாரிகள், பில் தயார் செய்து உள்ளதாகவும் தெரிவித்தார், இதனை அடுத்து நகர் மன்ற தலைவர் மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர் இடையே பலத்த வாக்குவாதமும் கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது, சாலை போடுவது குறித்து பதில் அளித்து பேசிய, நகராட்சி ஆணையர் சசிகலா பில் எழுதினாலும் அதற்குரிய பணம் நகராட்சியில் இல்லை என்றும், மீதமுள்ள சாலை போடுவதற்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை ஊடக செய்தியாளர்கள் படம் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், பத்திரிகைகளைத் தவிர, ஊடகங்கள் உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது யார் உள்ளே விட்டது என்று திமுக நகர்மன்ற தலைவர் செல்வராஜ், செய்தியாளர்களை மிரட்டியதுடன் வீடியோ எடுக்க கூடாது என்று உத்தரவிட்டார், சுய விளம்பரத்திற்காக திமுக உறுப்பினர் ரிஷி குமார் நிருபர்களை அழைத்து வந்துள்ளார் என்று குற்றம் சாட்டினார், திமுக நகர்மன்ற தலைவர் மீது திமுக உறுப்பினர் பரபரப்பாக குற்றம் சாட்டி பேசியதும், அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை நகர மன்ற தலைவர் மிரட்டியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
Note :- நகர மன்ற தலைவர் பேசும் அனைத்தும் வீடியோவில் உள்ளது













