அனந்தமங்கலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகத்துடன் சிறப்பு அலங்காரம் விஸ்வரூப காட்சி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காழியப்பநல்லூர் ஊராட்சி அனந்தமங்கலத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ராஜகோபால சவாமி கோவில் உலகிலேயே இங்கு மட்டும் சிறப்பு மூன்று கண்கள் பத்து கைகளுடன் ஆஞ்சநேயர் சிறப்பு அவதாரத்தில் விஸ்வரூபம் காட்சியில் தனி சன்னதியில் அமைந்துள்ள திரி நேத்திர தச புஜ வீர ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது இந்நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை ஒட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயரை சிறப்பு தரிசனம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வந்தனர் காலையில் ஆஞ்சநேயருக்கு பால் தேன் இளநீர் சந்தனம் பஞ்சாமிர்தம் பல்வேறு திரவிய பொடிகள் மூலம் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மூன்று கண்கள் பத்து கைகள் கருடாழ்வார் இறக்கையுடன் சிறப்பு அவதாரத்தில் விஸ்வரூப காட்சி அளித்த ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் சிறப்பு அபிஷேகம் பூஜையினை கோவிலில் பட்டாச்சாரியார் மாதவன் பட்டாச்சாரியார் செய்திருந்தார் என் என் சாவடி பகுதி சேர்ந்த பிரபாகரன் குடும்பத்தினர் உபயம் செய்திருந்தனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.













