மன்னார்குடி அருகே மகாதேவப்பட்டினம் ஶ்ரீ திரௌபதி அம்மன், ஶ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவபட்டினம் கிராமத்தில் உள்ள பழமையான திரௌபதி அம்மன் பட்டணம் மாரியம்மன் மற்றும் மன்னார்குடி வல்லப விநாயகர் கோவில் உள்ளிட்ட மூன்று கோவில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மூன்று கோவில்களிலும் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தனித்தனியாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்களாக யாக பூஜைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்று, மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி, மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, திரௌபதி அம்மன் மற்றும் பட்டணம் மாரியம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைப்போல மன்னார்குடி வ.உ.சி. சாலையில் அமைந்துள்ள ஶ்ரீ வல்லப விநாயகர் கோவிலிலும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வல்லப விநாயகரை தரிசனம் செய்தனர்.
FILE NAME : TVR MANNARGUDI THREE TEMPLE KUMBABISHEGAM NEWS 17.09.2026.













