நாகை அருகே அகரக்கடம்பனூர் அருள்மிகு சீதா லெஷ்மண அனுமத் ஸமேத ஸ்ரீ ராமஸ்வாமி பெருமாள், ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
நாகப்பட்டினம் மாவட்டம் அகரகடம்பனூரில் பழமை வாய்ந்த அருள்மிகு சீதா லெஷ்மண அனுமத் ஸமேத ஸ்ரீ ராமஸ்வாமி பெருமாள் ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலயங்கள் அமைந்துள்ளது. இவ்வாலயங்களின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது. கும்பாபிஷேக விழாவனாது கடந்த 15 ம் தேதி தீர்த்தம் எடுத்து வருதல் பெருமாள் பிரார்த்தனை, விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து நித்ய பூஜை,ரஷாபந்தன ப்ரதிஷ்டை நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தியுடன் முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாஹூதி தீபாராதனகள் நடைப்பெற்று வந்தது. இன்று கோ பூஜைகள் நடைப்பெற்று மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க பட்டாச்சிரியர்கள், சிவாச்சாரியர்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து வந்து வேதமந்திரங்கள் ஒலிக்க ஆலய கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.













