குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ; திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் கிராமத்தில், அஞ்சலாறு ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்து உள்ளது. ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் அமைக்கப்பட்டது, இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டாகி கோயில் விமான கலசத்தை அடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும் மகாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.













