மயிலாடுதுறை அருகே அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ; திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி கோயில் முன்பு யாகசாலை அமைத்து நேற்று கணபதி ஹோமத்துடன் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து முதல் கால யாகசால பூஜை தொடங்கி இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலைச் சுற்றி வலம் வந்தனர். பின்னர் பால விநாயகர், பாலமுருகன், ஸ்ரீ பெரியாச்சி அம்மன், ஸ்ரீ சப்த கன்னியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கும், ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் அரிவேளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.













