மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் மற்றும் எண்ணை எரிவாயு எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது, தமிழக அரசு தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும், மீத்தேன் திட்டம் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் வலியுறுத்தல் :-
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கடல் பகுதியில் 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் மற்றும் எண்ணெய் எரிவாயு எடுப்பதற்கான அனுமதியை ஹாட்லி என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக, சுற்றுச்சூழல் அனுமதி வேண்டி அந்த நிறுவனம் மத்திய அரசிடம் சமீபத்தில் விண்ணப்பம் செய்துள்ளது. ஐந்து இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க இந்த தனியார் நிறுவனம் அனுமதி விண்ணப்பம் வழங்கி உள்ள நிலையில், இதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது குறித்து மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், மத்திய அரசின் முடிவை எதிர்த்து தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும், மேலும் தமிழக கடற்கரை மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கேட்கும் பொழுது அனுமதி வழங்கக் கூடாது, ஏற்கனவே 51 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பல தனியார் நிறுவனங்களுக்கு கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் கடற்கரை ஓரம் மீன்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இந்த இடத்தை விட்டு இடப்பெயர்ச்சி அடையக்கூடும், மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும், தமிழக மக்கள் மற்றும் மீனவர்களின் நலனுக்கு எதிரான இந்தத் திட்டத்தை ஒருங்கிணைந்து அனைவரும் போராடி எதிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பைட்:-
பேராசிரியர் ஜெயராமன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு

















