திருக்களாச்சேரி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது கருட பகவான் மாநில வட்டமிட சிறப்பு பூஜை உடன் கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ பெட்டி காளி எனப்படும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது முன்னதாக இரண்டு கால யாக பூஜைகள் தொடங்கப்பட்டு சிறப்பு யாகத்துடன் பூர்ணாகதி மகாதீபாராதனை நடைபெற்று கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர கலசத்தில் சிறப்பு பூஜை உடன் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தின் போது வானில் கருட பகவான் வட்டம் இட பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்து வழிபாடு செய்தனர் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதன நடைபெற்றது சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபாடு செய்தனர் அன்னதானம் வழங்கப்பட்டது வருகின்ற 16 மற்றும் 17ஆம் தேதி இரண்டு நாட்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பெட்டி காளியம்மன் காட்சி பூசை விழா நடைபெற உள்ளது

















