ஆவடி மாநகராட்சி சார்பில் இந்து கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகம் நடைபெற்றது
சென்னை புறநகர் பகுதியானஆவடி மாநகராட்சி சார்பில், தூய்மை பாரத இயக்கம் – 2.0 திட்டத்தின் கீழ், பட்டாபிராம் இந்து கல்லூரியில் முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில்மாணவர்களுக்கு கழிவுகளை மூலத்திலேயே தரம் பிரித்தல், நான்கு வண்ணக் குப்பைத் தொட்டிகளின் பயன்பாடு, மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை தனித்தனியாக வழங்குதல், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டின் அவசியம், பொது இடங்களை தூய்மையாகப் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.
மேலும், “என் குப்பை – என் பொறுப்பு” என்ற பொறுப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தூய்மையான நகரை உருவாக்குவதிலும் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.
ஹிந்து கல்லூரி சார்பாக அதன் இயக்குநர் டாக்டர். ராஜேந்திர நாயுடு அவர்கள், வணிகவியல் HOD திரு.பார்த்திபன், கல்லூரியின் அலுமினி துணை செயலாளர் திரு.சடகோபன் பங்கேற்றனர்.
இந்நிகழ்விற்கு ஆவடி மாநகராட்சி துணை ஆணையர் திரு. Ditto அவர்கள் தலைமை வகித்தார். சுகாதார அலுவலர்கள் திரு. Mohideen மற்றும் திரு. Kumar, சுகாதார ஆய்வாளர்கள் திருமதி. Vidhya, திரு. Kalyan மற்றும் திரு. Bala Murugan, திருமதி. ஷீபா, SBM திட்ட ஒருங்கிணைப்பாளர், SBM பரப்புரையாளர்கள் மற்றும் DBC பணியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர்.
தூய்மையான ஆவடி மாநகராட்சியை உருவாக்குவதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இவ்விழிப்புணர்வு முகாம் பயனுள்ள வகையில் நடைபெற்றது.

















