செங்குன்றத்தில் கூட்டுறவு சங்க செக்கு எண்ணெய் அரவை ஆலையில் மின்சாரம் இல்லாமல் கேமரா வெளிச்சத்தில் ஆய்வு செய்தது திடீரென்று ஏற்பட்ட பிரச்சனை அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என திருவள்ளூரில் கூட்டுறவு துறைக்கு சம்பந்தமான இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பின் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறைக்கு சம்பந்தமான மருந்து சேமிப்புக்கிடங்கு, துண்டு பிரசுரங்களை அச்சடிக்கும் இயந்திரங்கள், கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியினையும், கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு விபரங்களை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகள் மழையில் வீணாகாத வகையில் தார்பாய்கள் உள்ளதால் 100 சதவீதம் பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்தார். செங்குன்றத்தில் கூட்டுறவு சங்க செக்கு எண்ணெய் அரவை ஆலையில் ஆய்வின்போது மின் தடை ஏற்பட்டது. கேமரா லைட் வெளிச்சத்தில் ஆய்வு மேற்கொண்டு உள்ளீர்களே இந்த ஆட்சியில் எப்போது மின்சார பிரச்சனை தீரும் என்ற கேள்விக்கு அமைச்சர் அது திடீரென்று ஏற்பட்ட மின் பிரச்சனை அது பெரிய விஷயம் இல்லை என விளக்கம் அளித்தார். முதலமைச்சரின் வீட்டின் அருகே புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு முதலமைச்சர் விஜய் உரிய பதிலளிப்பார் எனவும், வாக்களித்த மக்கள் முட்டாள் என முன்னாள் அமைச்சர் காந்தி பேசிய கேள்விக்கு அப்போது அவர்களுக்கு வாக்களித்த மக்களையும் அதே போன்று சரி என்று சொல்கிறாரா அவருக்கு புரிதல் அவ்வளவுதான் எனவும், நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அதிகபட்சமாக எதிர்க்கட்சிகளுக்கு தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்
பேட்டி : வி.காந்திராஜ் – கூட்டுறவுத்துறை அமைச்சர்.

















