பட்டா நிலத்தில் வாழும் 70 வயது மூதாட்டியை இடத்தை காலி செய்யச் சொல்லி, கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல், மருத்துவமனையில் அனுமதி, நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா உமையாள்பதி அடுத்த கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் திருமதி உத்திராடம், இவரது கணவர் மகாலிங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவரது மகன் மற்றும் மகள் திருமணம் ஆகி வெளியூரில் உள்ளனர். கிராமத்தில் இவருக்கு பூர்விகமான இடத்தில் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். நத்தம் புறம்போக்கு நிலத்தில், அரசு சார்பில் இவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், இவருக்கும் இவர் அருகில் உள்ள இடத்துக்கு சொந்தக்காரரான கனகராஜ் என்பவருக்கும் இடையே தகராறு நிலவி வந்தது, அரசு சார்பில் வழங்கப்பட்ட இவரது பட்டாவை ஏற்றுக்கொள்ளாமல் கனகராஜ் வீட்டை காலி செய்யும்படி தெரிவித்துள்ளார், வருவாய்த் துறையினர் ஆவணங்களில் திருத்தம் மேற்கொள்ளாமல் இன்னும் நத்தம் புறம்போக்கு என்ற நிலையிலேயே உள்ளதால், வருவாய்த்துறையினர் கனகராஜ் ஆதரவாக மூதாட்டியின் வீட்டை காலி செய்யும்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனகராஜ் மற்றும் அவரது மகன் வினோத் ஆகியோர் இணைந்து மூதாட்டி உத்திராடத்தை கடுமையாக தாக்கியுள்ளனர், இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் சம்பவம் குறித்தான நேரடி வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களுக்கு சொந்தமான இடத்தை மீட்டு தருவது உடன், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பைட்:-
1.கவிதா – மருமகள்
2 சுபஸ்ரீ – மகள்

















