திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேர திடீர் மழை – வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி..
தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென ஒன்று கூடிய கருமேகங்கள் திடீர் மழையினை வரவழைத்தது. இதன் காரணமாக திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கமலாபுரம், கொட்டாரக்குடி, வடபாதிமங்கலம், அன்னுக்குடி, கண்கொடுத்தவனிதம், மாவட்டகுடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் தனிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..

















