தவெக தலைமையிலான, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும், கம்யூனிஸ்டுகள் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள், அமைச்சர் செங்கோட்டையன் மயிலாடுதுறையில் பேட்டி :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறைக்கு வருகை தந்த வருவாய் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட அலுவலகத்தில் தினந்தோறும் நடைபெற்று வரும் விலையில்லா உணவு வழங்கும் பணியினை பார்வையிட்டு, ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கினார். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுக் கட்சியினரை சால்வை போர்த்தி வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி கலையும் என்று ஆர் எஸ் பாரதி பேசியது குறித்து பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்த தளபதி இருக்கும் வரை அவர்தான் நிரந்தர முதலமைச்சர், ஆர்.எஸ் பாரதி சொல்வது போல், ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை, திமுகவினருக்கு தான் நாட்கள் எண்ணப்படுகின்றன, தமிழக இடைத்தேர்தலில் 100% வெற்றி வாய்ப்பு எட்டுவோம், தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அதனை தீர்ப்பதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம் விரைவில் மின் உற்பத்தி அதிகரிக்கும், என்றார், கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், பொறுத்திருந்து பாருங்கள் மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும் என்று தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் உடல் மொழி கிண்டல் செய்தது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர், 2017 ஆம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் தனபால் அறையில் சேரை இழுத்து கீழே தள்ளி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த அராஜகம் எல்லோருக்கும் தெரியும், எனவே, அதனைப் பற்றி எல்லாம் பேச திமுகவுக்கு அருகதை இல்லை என்று தெரிவித்தார்.
பேட்டி: –
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

















