விழுப்புரம் மதர்ச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என்பது தோல்வியில் தான் முடியும்
கஜனா காலி என கூறி ஆட்சிக்கு வந்த விஜய்யின் அரசு பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைசெயலகம் அமைப்பததை கைவிட வேண்டும் என்றும் தமிழக வெற்றிக்கழகம் நாடகம் போல் புதிய கூட்டணியை அமைத்து இருப்பது நீண்ட நாள் நீடிக்காது, சட்டமன்றத்தில் ஸ்டாலினை கொச்சைபடுத்தி பேசியதற்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா தமிழ்நாட்டில் நடைபெற்று வரக்கூடிய தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியில் கஜானா காலியாக உள்ளது என தெரிவித்து ஆட்சி செய்து வருகிற நிலையில் தலைமை செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைக்கபடும் என அறிவித்துள்ளது அங்குள்ள மீனவர்களை பாதிக்கும், ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தினால் போக்குவரத்து நெரிசல் இல்லை பட்டினபாக்கத்தில் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கூடங்கள் பட்டினப்பாக்கத்தில் உள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்
போக்குவரத்து நெரிசல் உள்ள பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைப்பதினால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் புதிய தலைமை செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
சட்டமன்ற நடைபெற்ற கடைசி இரண்டு நாட்களில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் சைகைமொழியில் முதல்வர் விஜய் பேசியது கண்டனத்துக்குரியது மிசாவில் தமிழக அமைச்சர்கள் பச்ச பொய் கூறியிருப்பதாகவும்,
மிசாவினால் மிகப்பெரிய கொடுமைக்கு ஸ்டாலின் ஆளாகி இருப்பதாக கூறினார். மிசா குறித்து சட்டமன்றத்தில் உள்ள நூலகத்தை முதல்வர் பார்க்க கூறியது போல் தானும் சென்று பார்த்துள்ளேன் அதில் ஸ்டாலின் எப்படி மிசாவினால் கொடுமைக்கு ஆளாகினார் என அங்குள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,
வரலாற்றை முழு சோற்றில் மறைக்க கூடியது போல் அமைச்சர்கள் சொல்லி இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு
அரசு காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட கூடாது, முதல்வர் பிரதான எதிர்கட்சி தலைவரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல என குற்றஞ்சாட்டினார்.
சட்டமன்றத்தில் ஸ்டாலினை கொச்சைபடுத்தி பேசியதற்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தாராபுரம் மதுராந்தகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மனித நேய மக்கள் கட்சி செயல்படும் என கூறினார். மக்கள் தொகை கணக்கெடுப்பு பல மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பு 2021 ல் நடத்திருக்க வேண்டும், என் ஆர் சி என் ஆர்பி என்பதையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டையும் சேர்த்து நடத்த கூடாது.எத்தனை வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்கள் என்ற கேள்வி மக்கள் தொகை கணக்கெடுப்பு கேட்பது பலரும் உண்மைக்கு மாறான தகவல் சொன்னால் ஏற்புடையதாக இருக்குமா என கேள்வி எழுப்பினார். என் பி ஆர் என் ஆர்சியில் மக்களின் விவரங்களை மாநில அரசு ஊழியர்கள் கொண்டு மத்திய அரசு சேகரிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதற்கு எதிரான போராட்டத்தை மனித நேய மக்கள் கட்சி முன்னெடுக்கும் என தெரிவித்தார்.
புதிய கூட்டணி அமைத்துள்ளது என்பது மறைமுகமாக பாஜக வந்துவிட கூடாது என்பதற்காக தவெகவுடன் வைத்துள்ளார்கள்.
நாடகம் போல் தவெக கூட்டணியை அமைத்து இருக்கிறார்கள். நீண்ட நாள் இந்த கூட்டணி நீடிக்காது. அமலாக்க துறை மூலம் பாஜக மிரட்டி வருகிறது இதில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும், மதர்ச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என்பது தோல்வியில் தான் முடியும்.
சட்டமன்றத்தின் மரபுகளை பின்பற்றாத முதல்வர் விஜய் வெளிநாடு பயணம் குறித்து தகவல் தெரிவிக்காமல் உள்ளது கமுக்கமாக செயல்படுவது ஆச்சரிய படுவதற்கு இல்லை..
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு செல்வதாகவும்,
விசிக இப்போது தவெக கூட்டணியில் இருக்கலாம் எத்தனை நாள் சகித்து கொண்டு இருப்பார்கள் என தெரியவில்லை.மலேசியாவில் உள்ள நாடாளுமன்றத்திலும் இலங்கை நாடாளுமன்றத்திலும் ஆங்கிலம் கலப்பு இல்லாமல் தமிழ் பேசுகிறார்கள் ஆனால் தமிழக சட்டமன்றத்தில் ஆங்கில சொல் இணைபோடு பேசுவது தமிழ்நாட்டில் தமிழ் வாழ்கிறதா அல்லது வீழ்கிறதா என கேள்வி எழும்புவதாக ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார்.
பேட்டி – ஜவஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி தலைவர் )

















