சீர்காழியில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி ஒவ்வொருவரையும் நிறுத்தி போலீசார் கொடுத்த சர்ப்ரைஸ்
சீர்காழி உட்கோட்ட காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக புதிய பேருந்து நிலையம் பகுதியில் சீர்காழி டிஎஸ்பி சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் போலீசார் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி இதுபோன்று எப்பொழுதும் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்













