நேபாளம் பேரிடரில் சிக்கி காணாமல் போன, மயிலாடுதுறை வள்ளாலகரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியிருப்புவாசிகள், உறவினர்கள் கோரிக்கை மனு அளித்தனர்:-
நேபாளம் புனித பயணத்துக்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 57 பயணிகள் யாத்திரை சென்று இருந்தனர். அவர்களில் 21 பேர் மட்டுமே இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் மயிலாடுதுறையை சேர்ந்த 7 பேர் சென்றிருந்த நிலையில் 3 பேர் இதுவரை பாதுகாப்பாக மயிலாடுதுறைக்கு திரும்பி உள்ளனர். மயிலாடுதுறையை அடுத்த வள்ளாலகரம் கிராமத்தில் இருந்து யாத்திரைக்கு சென்று இருந்த உதயகுமார் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் உதயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த நிலையில் காணாமல் போன ராஜேஸ்வரியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வள்ளாலகரம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த ஊராட்சியை சேர்ந்த நிர்வாகிகள், மற்றும் உறவினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளித்தனர்.
பைட்:-
அன்பழகன்- குடியிருப்பு வாசிகள் நல சங்க பொறுப்பாளர்














