ஈரான் கடற்கொள்ளையர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்களின் உடல்களை தாயகம் கொண்டுவர தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி உதவி வழங்கிய மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மாவீரன், கீழ்மூவர்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சங்கர், திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் சவூதி அரபியாவில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தபோது கடந்த பத்தாம் தேதி கடல் கொள்ளையற்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குண்டடிபட்டனர். சவுதி அரேபியாவில் கடந்த 11ஆம் தேதி அதிகாலை மாவீரன் சங்கர்தான் தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்து தொடர் சிகிச்சையில் இருந்த கீழ்மூவர்கரை மீனவர் சங்கர் சிகிச்சை பலனின்றி கடந்த 20ம் தேதி உயிரிழந்தார் .இந்நிலையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மாவீரன் சங்கர் குடும்பத்தினருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்து தமிழக அரசின் நிவாரண உதவிக்கான காசோலைகளை வழங்கினர். அப்போது மீனவர்களின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.















