உயர் நீதிமன்ற போர்ட் போலியோ நீதிபதி பாலாஜி திருப்பத்தூர் மாவட்ட தலைமை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக விரிவாக்கம் மற்றும் வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைவது குறித்து ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர காவல் நிலையம் அருகே மாவட்ட தலைமை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தற்பொழுது மாவட்ட நீதிமன்றம் சார்பு நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின்பு தற்போது இருக்கின்ற அதே நீதிமன்ற வளாகத்தில் மேலும் தேவைப்படுகின்ற மகிலா நீதிமன்றம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றம் போக்சோ நீதிமன்றம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நீதிமன்ற வளாகம் தேவைப்படும் சூழ்நிலையில் மாவட்ட வன அலுவலகம் இயங்கும் இரண்டரை ஏக்கர் நிலத்தில் கூடுதல் நீதிமன்றம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து வாணியம்பாடி கச்சேரி தெருவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க இடையூறாக இருந்த கோயிலை நேரில் கண்டு ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதி கோயில் இருக்கும் இடத்தை அப்புறப்படுத்தாமல் மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்திச் சென்றார்.















