வைத்தீஸ்வரன்கோவிலில் நடைபெற்ற தமிழிசை விழாவில் மைக் பெட்டியில் டிரம்ஸ் வாசித்து தருமபுரம் ஆதீனத்தை அசத்திய ட்ரம்ஸ் சிவமணி
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ வைத்தியநாதர் சுவாமி திருக்கோவில் வளாகத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற தமிழிசை விழாவிற்கு
தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் இராஜாராமன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று மாணவ, மாணவிகளை சான்றிதழ் வழங்கி ஆசியுரை வழங்கி பேசுகையில்,
கலை பண்பாட்டில் மட்டும் தான் தாய்,தந்தை,ஆசான் இவர்களை மதிக்கும் பண்பாடு உள்ளது. நாட்டியம் ஆடும் குழந்தைகள் ஆசிரியரை தொட்டு வணங்கிவிட்டுதான் மேடை ஏறுவார்கள்.
இது தான் பாரம்பரியமிக்க பண்பாடு.
முதலில் குழந்தைகள் தாய், தந்தையரை வணங்கவேண்டும், என்றார்.
தொடர்ந்து விழாவில் பங்கேற்ற டிரம்ஸ் சிவமணி விழா மேடையில் வாத்திய கருவிகள் எதுவும் இல்லாமல் மைக் வைக்கும் சிறு பெட்டியை திடீரென வாங்கி அதில் ட்ரம்ஸ் இசையை வாசித்து காட்டினார்.விழா மேடையில் அமர்ந்திருந்த தருமபுரம் ஆதீனம் இதனை கண்டு மகிழ்ந்து ரசித்தார்.














