திருக்கடையூர் கோவிலில் மேளம் வாசித்த டிரம்ஸ் மணி வியந்து பார்த்த பக்தர்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் நாள்தோறும் அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் வெளிநாட்டவர்களும் வந்து செல்கின்றனர் வருடம் 365 நாட்களும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது ஆயுள் விருத்தி ஆயுள் ஹோமம் சஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகம் கனகாபிஷேகம் என சிறப்பு யாகங்கள் செய்து வழிபாடு செய்கின்றனர் இந்நிலையில் திருக்கடையூர் கோவிலில் பிரபல திரைப்பட ட்ரம்ஸ் இசையமைப்பாளர் ட்ரம்ஸ் சிவமணி கோவிலின் சிறப்பு தரிசனம் செய்து வழிபாடு செய்தார் அப்பொழுது அங்கிருந்த மேளத்தை வாங்கிய அவர் நாதஸ்வரம் இசைக்க தானே மேளத்தை வாசித்தார் நடந்து கொண்டே மேளத்தை வாசித்து சென்ற டிரம்ஸ் மணியை பார்த்து பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தனர் பின்னர் சாமி தரிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.













