October 8, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

புழலில் வரலட்சுமி நோன்பு விழா: 1,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் MLAவிஜய் பிரபு பங்கேற்பு

by Satheesa
August 23, 2026
in News
A A
0
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

புழலில் வரலட்சுமி நோன்பு விழா: 1,000 பெண்களுக்கு புடவை, தட்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் எம்.எல்.ஏ. விஜய் பிரபு பங்கேற்பு

சென்னை மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட புழல் பகுதியில், மத்திய பகுதி பொருளாளர் திருமதி மகாலட்சுமி ஜெயக்குமார் அவர்களின் இல்லத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு பூஜை, கலை நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் பிரபு தலைமையில் ஏராளமான பெண்கள், மாணவ–மாணவிகள், சிறுவர்–சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, சுமார் 1,000 நபர்களுக்கு புடவை, தட்டு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் வரலட்சுமி நோன்பில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்தனர்.

மேலும், மாணவ–மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நாதஸ்வரம், கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், வீணை மற்றும் கீபோர்டு இசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய நிலையில், அதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் பிரபு, வீரர்களை பாராட்டி அவர்களின் விளையாட்டு திறமைகளை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வாழ்த்துகளை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்ற மாணவ–மாணவிகளுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டனர்.

மேலும், விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஸ்ரீ சத்ய சாய் பாபா கோவில் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆன்மிகம், கலை மற்றும் விளையாட்டு திறமைகளை ஒருங்கிணைத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: district newsMLA VIJAYtamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண அறிவிப்பு, குடிநீர் பற்றாக்குறையை போக்க டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்

Next Post

குற்ற சம்பவங்கள் & போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 நபர்களுக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026
Next Post
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

குற்ற சம்பவங்கள் & போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 நபர்களுக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

October 4, 2026
ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் சவுதி அரேபியாவில் உயிரிழந்த 2 மீனவர்களுக்குஅரசு அதிகாரிகள் அஞ்சலி

தரங்கம்பாடி பேரூராட்சியில் 3 இடங்களில் 27லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின்விளக்குகள் MP. சுதா திறப்புவிழா

September 20, 2026
மயிலாடுதுறையில் பாரம்பரிய முறையில் வேட்டி,சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள்

January 14, 2026
கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

December 26, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.