தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி. மயிலாடுதுறை அருகே மன்னமந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று உறுதிமொழி ஏற்பு. போதைப் பொருளுக்கு எதிராக சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை பிரசிடென்சி கல்லூரி கலையரங்கத்தில் போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இந்நிகழ்ச்சி பள்ளி கல்லூரிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் முதலமைச்சர் தலைமையில் ஒரே நேரத்தில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்று ஒரே நேரத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திய பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மாவட்ட எஸ்பி சினேஹா ப்ரியா பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்













