மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை உடைத்து மட்டும் இரண்டரை பவுன் நகை,வெள்ளி பொருட்கள் பைக் ஆகியவை திருட்டு போனது. குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று மணல்மேடு அருகே முட்டம் பாலத்தில் போலீஸார் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்த போது பைக்கில் வந்தவர்களை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் மணல்மேடு அருகே உள்ள தாழஞ்சேரி பெரிய தெருவை சேர்ந்த தங்கராசு மகன் ரஜினி(46), திண்டுக் கல் மாவட்டம் வத்தலகுண்டு காளிய ம்மன் கோயில்தெரு மாரியப்பன் மகன் குமார்(34), திருச்சி தொட்டியம் ரோடு வடுகத்தெரு ஜெயப்பிரகாஷ் மகன் சுபாஷ்(29) என்பதும் இவர்கள் மூவரும் ராணி வீட்டில் திருட்டில் ஈடு பட்டதும் தெரியவந்தது.இதையடுத்து மணல்மேடு இன்ஸ் பெக்டர் முத்துலட் சுமி மற்றும் போலீசார் ரஜினி, குமார், சுபாஷ் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மொபட் மற்றும் வெள்ளிப்பொருள்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.













