திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதி சான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா திருவீழிமிழலை கிராமப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆறு தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு ஜாதி சான்று வழங்கவில்லை எனக் கூறி இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய் ஆய்வாளர் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் சாதி சான்று வழங்காததால் 50க்கும் மேற்பட்ட மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் 50 வருடங்களாக திருவீழிமிழலை கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியினர் மக்களுக்கு ஜாதி சான்று இல்லாத நிலை பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது எனவும் கூறப்படுகிறது. பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் அரசாங்க மூலம் கிடைக்க வேண்டிய எந்த ஒரு நலத்திட்டங்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.













