September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தென்னிந்திய அளவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இளமுகிலன் வெள்ளி பதக்கம்

by Satheesa
August 11, 2026
in News
A A
0
தென்னிந்திய அளவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இளமுகிலன் வெள்ளி பதக்கம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தென்னிந்திய அளவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில், டெல்டா மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட ஒரே மாணவரான இடது கை சுழற் பந்து வீச்சாளரான இளமுகிலன் வெள்ளி பதக்கம் வென்றதையொட்டி பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

திருவாரூர் அருகே கூட்டுறவு நகர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி – ராஜேஸ்வரி தம்பதிக்கு இளமுகிலன் என்ற மகனும், இனியா என்ற மகளும் இருக்கின்றனர்.

ராமமூர்த்தி – ராஜேஸ்வரி தம்பதியின் மூத்த மகனான இளமுகிலன், தற்போது கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள டெல்டா பப்ளிக் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் போட்டியில் மிகுந்த ஆர்வம் உடைய இளமுகிலனை அவரது கிரிக்கெட் பயிற்சியாளர் ஜெகதீசன் என்பவர் மெருகேற்றி உள்ளார்.

இடதுகை சுழற்பந்துவீச்சாளரான இளமுகிலன் தற்போது தென்னிந்திய அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த 31 ஆம் தேதி முதல் நான்காம் தேதி வரை மதுரையில் உள்ள கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், 19 வயதுக்குட்பட்டோருக்கான சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கான தென்னிந்திய அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும், யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.

சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், டெல்டா மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் திருவாரூரை சேர்ந்த இளமுகிலன் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு பிரிவுகளின் கீழ் 5 நாட்களுக்கு நடைபெற்ற போட்டியில், ஒவ்வொரு இடமாக முன்னேறி இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இளமுகிலன் தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு ஓவரில் மூன்று விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்தார்.

இருந்தபோதிலும் போட்டி முழுமையாக நடைபெறாமல், வானிலை நிலவரம் காரணமாக டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இளமுகிலன் கலந்து கொண்ட அணியானது இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

தென்னிந்திய அளவில் நடைபெற்ற டி20 சாம்பியன்ஷிப் போட்டியில், டெல்டா மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட ஒரே மாணவரான இளமுகிலன் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை புரிந்தது திருவாரூர் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது.

வெள்ளிப் பதக்கம் வென்ற இந்த மாணவர் விளையாட்டில் மட்டுமல்லாமல் படிப்பிலும் படு சுட்டியாக திகழ்ந்துள்ளார். பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கு கொண்டு சிறப்பிடம் பெற்றார்.

தற்போது தென்னிந்திய அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவர் இளமுகிலன், தேசிய அளவில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் பங்குபெறுவதற்காக தற்போது காத்திருப்பு பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டா மாவட்டங்களில் இருந்து தென்னிந்திய அளவிலான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்று, பள்ளிக்கும் திருவாரூருக்கும் பெருமை சேர்த்த மாணவர் இளமுகிலனை பள்ளியின் முதல்வர் ஜோஸ்பின் லாரன்ஸ் நேரில் அழைத்து மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மேலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி விளையாட்டு ஆசிரியர் சுகேந்திரன் மற்றும் பள்ளியில் இளமுகிலனுடன் படிக்கும் மாணவர்களும் சாதனை புரிந்த இளமுகிலனை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோடங்குடி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக பகிரங்கமாக சாராய விற்பனை தட்டி கேட்பவர்களுக்கு கொலைமிரட்டல்

Next Post

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
Next Post
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
வந்தே மாதரம் பாடலை அவமரியாதை செய்த சோனியா காந்தியை கண்டித்து மயிலாடுதுறையில் BJPசார்பில் ஆர்ப்பாட்டம்

August 18, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.