கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பணிமய அன்னை ஆலயத்தில் 9 வது திருவிழாவையொட்டி தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது – இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி முழக்கத்துடன் அன்னையை வழிபட்டனர்- அன்னையின் தேர்பவனில் வலம் வரும் பகுதிகளில் பங்கேற்ற பக்தர்களுக்கு தவெக வினர் தேநீர் விருந்து அளித்தனர்- இச்சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பணிமய அன்னை ஆலயத்தில் ஆண்டு திருவிழா பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. மேலும், தினமும் இளையோர், முதியோர், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு திருப்பலிகள் நடக்கின்றது.விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று நடைபெற்றது 9 வது நாள் திருவிழாவில் கோலாகலமாக தொடங்கியது.தேரில் பனிமய அன்னை எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி முழக்கத்துடன் அன்னையை வழிபட்டனர். இதில் சிறப்பம்சமாக தேர் பவனி வலம் வரும் பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்ப்பவனியில் பங்கேற்ற பக்தர்களுக்கு தேநீர் விருந்து அளித்தனர்













