கன்னியாகுமரி மாவட்டம்: தமிழக பட்ஜெட்டில் மாங்குரோ காடுகளை புதிதாக கடலோர மாவட்டங்களில் உருவாக்க 40 கோடி ரூபாய் நிதி அறிவித்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி பகுதியில் 1444 ஹெக்டர் பரப்பளவில் தற்போது மாங்குரோவ் காடுகள் உள்ளன கூடுதலாக மாங்குரோ மரங்களை நடுவதற்கு இடங்கள் இருந்தும் அந்தப் பகுதிகளில் சீமை கருவேல மரம் ஆக்கிரமித்து வைத்துள்ளன சீமை கருவேல மரங்களை அகற்றி மாங்குரோவ் மரங்களை கூடுதலாக நடவு செய்ய மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தித் தாவரங்கள் அல்லது சதுப்பு நிலக்காடுகள், கடலோரப் பகுதிகள், ஆற்று முகத்துவாரங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் உப்பு நீரில் வளரக்கூடிய தனித்துவமான மரங்களாகும். இவை கடலில் இருந்து கரையைத் பாதுகாக்கும் அரணாகவும், பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாகவும் விளங்குகிறது. இந்த நிலையில் தற்போது நடைபெற்ற தமிழக நிதி அறிக்கையில் புதிதாக கடலோர மாவட்டங்களில் 2500 ஹிட்டர் பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் அமைப்பதற்காக 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவர் கிராமத்தில் கடலில் இருந்து கரையை பாதுகாக்க 1993 ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து விதைகள் வரவழைக்கப்பட்டு நடும் பணி நடைபெற்றது இதில் தற்போது 1444 ஹிட்டர் பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் நிறைந்து உள்ளன இதில் கூடுதலாக மாங்குரோவ் காடுகள் அமைப்பதற்கான இடம் இருந்தும் அந்தப் பகுதிகள் முழுவதும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளது எனவே இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிதாக மாங்குரோவ் காடுகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் இடையூறாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி அந்தப் பகுதிகளில் மாங்குரோவ் நடுவதற்கான மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் அப்பகுதியில் அதிகளவு மாங்குரோவ் மரங்கள் உருவாகுவதால் ஏற்படும் நன்மைகள் மீன் வளங்கள் பெருகும் அதே நேரத்தில் பாதுகாப்பான சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்யலாம், இதனால் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக காணப்படும் தொடர்ந்து சீசன் நாட்களில் வெளிநாட்டு பறவைகள் அதிகளவு வருகை தரும் இதனால் சுற்றுலாத்துறை மென்மேலும் அடைய அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.













