முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம்: விழுப்புரத்தில் திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை – அன்னதானம் வழங்கப்பட்டது.
முத்தமிழ் அறிஞரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் விழுப்புரம் நகர செயலாளர் வெற்றி சார்பில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்களின் ஆணைக்கிணங்க நடைபெற்ற இந்நிகழ்ச்சி, விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் 7வது வார்டில் நடைபெற்றது. இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்றுச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் வெற்றி, நகரப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் உண்மை நிழல் ராஜா, ஜமாலுதீன், லெனின் விஜய், வீரப்பன், எம்.சி. ராம், புகழேந்தி, சூரியமூர்த்தி, ஜான்பாஸ்கோ, தொ.மு.சா. குமார் Ex MCஅசாருதீன், பிரான்சிகா, எஸ்.கே. குமரன் 7வது வார்டு செயலாளர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினர்













