திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு டி.என்.சி.எஸ்.சி மற்றும் சி.ஐ.டி.யுனர் பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.*
திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு ராஜா மண்டல தலைவர் தலைமையில் பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி டி.என்.சி.எஸ்.சி மற்றும் சி.ஐ.டி.யுனர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான கோரிக்கையாக 2013 முதல் 2016 வரையிலான அனைத்து பருவ கால ஊழியர்களையும் பணி நிரந்திரம் செய்ய வலியுறுத்தியும் மற்றும் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை 48 மணி நேரத்திற்குள் இயக்கம் செய்யவில்லை எனில் ஏற்படும் இயற்கை இழப்பை அரசே ஏற்றிடக்கோரியும்.
மேலும் நீண்ட நாட்களாக நீடித்து வரும் திருவாரூர் மண்டல அலுவலகம் குடிநீர் பிரச்சினையை தீர்த்திடக்கோரியும் மற்றும் நிரந்தர ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தை போல் பருவகால ஊழியர்களின் மாத சம்பளத்தை மாற்றி அமைத்திட உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.என்.சி.எஸ்.சி மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சண்முகம் மற்றும் சிஐடியு மாவட்ட செயலாளர் ஹனிபா உள்ளிட்ட ஏராளமான டி.என்.சி.எஸ்.சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
















