• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குடும்பத் தகராறில் கொடூரம்: கீழ்வேளூர் அருகே பெண் கழுத்தறுத்து கொலை

by Satheesa
July 29, 2026
in News
0
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

குடும்பத் தகராறில் கொடூரம்: கீழ்வேளூர் அருகே பெண் கழுத்தறுத்து கொலை – தலைமறைவான நபருக்கு போலீஸ் வலை வீச்சு;

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் கத்தியால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

​

​திருவாரூர் மாவட்டம் கடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான ரமேஷ் – பிரவீனா தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீனா தன் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

​அதன்பின்னர், கடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருடன் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த குறுக்கத்தி பகுதியில் பிரவீனா கடந்த 2 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

​இந்நிலையில், இன்று குமாருக்கும் பிரவீனாவுக்கும் இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரவீனாவின் கழுத்தை அறுத்து சம்பவ இடத்திலேயே படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

​மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிரவீனாவின் மகள், தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அலறித் துடித்துள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக கீழ்வேளூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

​

​சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்வேளூர் காவல்துறையினர், பிரவீனாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

​மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

Next Post

ஆக்கூரில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

Related Posts

மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கந்தசஷ்டி நான்காம்நாள் வல்லக்கோட்டை முருகனுக்கு வெள்ளைசாற்று அலங்காரம்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

திருக்கடையூரில் தனது பிறந்த நாளை ஒட்டி பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பென்சில் பேனா

November 13, 2026
Next Post
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

ஆக்கூரில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

by Satheesa
November 13, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6