நாகை அருகே பனைமேடு அருள்மிகு செங்கம்மா காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவை முன்னிட்டு 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஏந்தி வந்து அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சி பனைமேடு கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு செங்கம்மா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆடி பெருந்திருவிழா கடந்த 20 ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு பூர்சொரிதல் நிகழ்வு இன்று கோலாகலமாக நடைப்பெற்றது. பால்குளத்தில் இருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக ஆலயத்திற்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.















