மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், புதிய மேம்பாலம் கட்டும் பணி ராட்சத கிரேன் உதவியுடன் துவங்கியது, இதன் காரணமாக ரயில் சேவையில் சிறிய மாறுதல் செய்யப்பட்டுள்ளது :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் இருந்து ஐந்தாவது நடைமேடையை இணைக்கும் வகையில், இரும்பினால் நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏழு மீட்டர் அகலத்திற்கு முதலாவது நடைமேடையில் இருந்து ஐந்தாவது நடைமேடை வரை நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக மிகப்பெரிய ராட்சச கிரேன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இரும்பு தூண்கள் கொண்டு பாலம் கட்டப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு மயிலாடுதுறை காரைக்குடி இடையிலான ரயில் சேவைகள் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது, காலை 6 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்டு மயிலாடுதுறை வரும் ரயில், மயிலாடுதுறை – திருவாரூர் இடையே ஞாயிற்றுக்கிழமை வரை ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் காரைக்குடி செல்லும் ரயில் வழக்கம் போல இயங்கும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது














