ஜனநாயகன் திரைப்படம் வெளியான தியேட்டர் வாசலில், நரிக்குறவர்கள், குடிசைவாசிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் வழங்கி, இலவசமாக திரைப்பட டிக்கெட் வழங்கப்பட்டது:-
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள ஜனநாயகன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் வெளிவந்த கடைசி திரைப்படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் பல்வேறு விதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறையில் விஜயா தியேட்டர் திரையரங்கம் முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு காலை உணவு விலை இன்றி வழங்கப்பட்டது, மேலும் மயிலாடுதுறை சார்ந்த நரிக்குறவர்கள் கூலித் தொழிலாளர்களுக்கு, உணவுடன் திரைப்பட டிக்கெட் களை கட்சியின் மாவட்ட செயலாளர் கோபிநாத் வழங்கினார். தொடர்ந்து ரசிகர்கள் விஜயின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.















